தங்கத்தின் விலை ரூ.12,700-யை எட்டியது!

திங்கள், 3 மார்ச் 2008 (18:51 IST)
மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று 22 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.190 உயர்ந்து இதுவரை இல்லாத விலை அளவை எட்டியுள்ளது.

சில பங்கு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருது தங்கம், வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்துள்ளதாக வர்த்தகர்கள் தெர்விக்கின்றனர்.


மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்றைய விலை நிலவரம்:

24 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12, 810 (நேற்று முன்தினம் ரூ.12,620)
22 காரட் தங்கம் 10 கிராம்: ரூ.12,755 (12,565)
பார் வெள்ளி ஒரு கிலோ: ரூ.24,515 (24,020)

வெப்துனியாவைப் படிக்கவும்