வெள்ளி, 29 பிப்ரவரி 2008 (11:18 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் சரிந்தன.
காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 114.61 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,708,97 குறைந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 41.05 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5244.05 ஆக குறைந்தது.
ஆனால் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 37.71, சுமால் கேப் 43.85 புள்ளிகள் அதிகரித்து இருந்தன. அதே நேரத்தில் பி.எஸ்.இ 500- 25.74 புள்ளிகள் சரிந்தன.
தேசிய பங்குச் சந்தையிலும் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன.
இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
இதில் இடம் பெறும் அம்சங்களைப் பொறுத்தே பங்குச் சந்தையின் நடவடிக்கை இருக்கும.
தொழில் மற்றும் வர்த்தக துறைக்கு சாதகமாக இருந்தால், பங்குவிலை உயர வாய்ப்பு உள்ளது.