மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறைந்த குறியீட்டு எண்கள் அதிகரித்து இருந்தன. வர்த்தகம் தொடங்கிய பத்தாவது நிமிடத்திலேயே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைய ஆரம்பித்தன.
மதியம் 1 மணியளவில் அதிகரித்த குறியீட்டு எண்கள் இறுதி வரை உயரந்து கொண்டே இருந்தது. இறுதியில் சென்செக்ஸ் 301.50 புள்ளிகள் அதிகரித்தது.
சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்தைவிட 301.50 புள்ளிகள் அதிகரித்து 17,650.57 புள்ளிகளாக உயர்ந்தது.
இதே போல் நிஃப்டி 89.95 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,200.70 ஆக உயர்ந்தது.
இன்று அந்நிய முதலீட்டு நிறுவனங்களும், பரஸ்பர நிதி நிறுவனங்களும் அதிக அளவு பங்குகளை வாங்கினார்கள். பெட்ரோலிய நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிக அளவு அதிகரித்தன.
நேற்று ரிலையன்ஸ் பவர் போனஸ் பங்குகளை அறிவித்தது. இன்று இதன் விலை 450.40 ஆக உயர்ந்தது. இது 8.05 விழுக்காடு உயர்வு.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையில் 1,610 பங்குகளின் விலைகள் குறைந்தன. 1,064 பங்குகளின் விலைகள் அதிகரித்தன. 45 பங்குகளின் விலையில் மாற்றமில்லை.
பெட்ரோலிய நிறுவனங்களின் குறியீடு 384.38 புள்ளி, உலோக உற்பத்தி நிறுவனங்கள் பிரிவு 161.22,நுக்ர்வோர் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் பிரிவு 144.11, ரியல் எஸ்டேட் 108.17, பொதுத் துறை பிரிவு 99.13 புள்ளிகள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 0.04 சுமால் கேப் 69.13 புள்ளிகள் குறைந்தன. ஆனால் பி.எஸ்.இ. 500-75.72 புள்ளி அதிகரித்தது.
அதே போல் நிப்டி ஜீனியர் 57.10,சி.என்.எக்ஸ் ஐ.டி 65.40, சி.என்.எக்ஸ் 100-78.80,சி.என்.எக்ஸ் டிப்டி69.90,சி.என்.எக்ஸ் 500-51.50,சி., சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-16.35 புள்ளிகள் அதிகரித்தன. பாங்க் நிஃப்டி18.60, என்.எக்ஸ் மிட் கேப் 8 புள்ளிகள் குறைந்தன.
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில் 26 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. 4 நிறுவனத்தின் பங்கு விலை குறைந்தது.
விலை குறைந்த பங்கு: 1) பஜாஜ் ஆட்டோ ரூ.2202.95 (ரூ.92.65) 2) ஹெச்.டி.எப்.சி. வங்கி ரூ.1422.70 (ரூ.52.25) 3) ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.215.40 (ரூ.00.35) 4) மகேந்திரா அண்ட் மகேந்திரா ரூ.628.60 (ரூ.00.20)