மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், சிறிது சிறிதாக குறைந்து, மதியம் 1 மணியளவில் நேற்றைய இறுதி நிலவரத்தை விட குறைந்தன.
பிறகு சுமார் 3 மணியளவில் அதிகரித்து குறியீட்டு எண் இறுதியாக 117.80 புள்ளிகள் அதிகரித்தது. இறுதியில் சென்செக்ஸ் 117.80 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,734.68 ஆக உயர்ந்தது.
இதே போல் நிஃப்டி 37.35 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5191.80 ஆக உயர்ந்தது.
இன்று நடந்த வர்த்தகத்தில் சென்செக்ஸ் 17,911.66 புள்ளிகளாக உயர்ந்தது. இதே போல் 17,482.31 ஆக குறைந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5,241.35 ஆக உயர்ந்ததது. இதே போல் 5,120.05 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் வங்கி,நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி பிரிவு தவிர மற்ற பிரிவு குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இன்று வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பங்கு விலை 4 முதல் 5 விழுக்காடு வரை குறைந்தது. மும்பை பங்குச் சந்தையில் ரொக்க பிரிவில் ரூ.5,383 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 79.54, சுமால் கேப் 61.73, பி.எஸ்.இ. 500-46.85 புள்ளிகள் அதிகரித்தன.
அதே போல் நிப்டி ஜீனியர் 37.35, சி.என்.எக்ஸ் ஐ.டி 166.30, சி.என்.எக்ஸ் 100-33.90, சி.என்.எக்ஸ் டிப்டி 51.35, சி.என்.எக்ஸ் 500-31.00,சி.என்.எக்ஸ் மிட் கேப் 29.45, சி.என்.எக்ஸ் மிட் கேப் 50-40.85 புள்ளிகள் அதிகரித்தன.
ஆனால் பாங்க் நிஃப்டி 182.90 புள்ளி குறைந்தது.
இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில் 21 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. 9 நிறுவனத்தின் பங்கு விலை குறைந்தது.