பங்குச் சந்தை 67 புள்ளிகள் சரிவு!

திங்கள், 18 பிப்ரவரி 2008 (19:42 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், பத்து நிமிடங்களில் குறைய தொடங்கின. பிறகு இறுதி வரை தொடர்ந்து குறைந்தன.

ரிலையன்ஸ் பவர் பங்குகளுக்கு போனஸ் பங்கு வழங்கப் போவதாக வந்த தகவலால், பங்குச் சந்தையில் பின்னடைவு இருக்காது என கருதப்பட்டது. ஆனால் இதற்கு மாறாக தொடர்ந்து குறியீட்டு எண்கள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,850 பங்குகளின் விலை அதிகரித்தது. 878 பங்குகளின் விலை குறைந்தது. 46 பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. மொத்தம் ரூ.4,951 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனையாயின. வெள்ளிக்கிழமை 6,415.18 கோடி மதிப்புள்ள பங்குகள் விற்பனையாகி இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் முன்பேர சந்தையில் ரூ.32,416.67 கோடிக்கு வர்த்தகம் நடந்தது. வெள்ளிக்கிழமையன்று ரூ.42,675.67 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது.

இன்றைய குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் ரிலையன்ஸ் பவர் பங்குகளில் அதிக அளவு வர்த்தகம் நடந்தது. இதன் அதிகபட்ச விலையாக ரூ.429.60 வரை அதிகரித்தது. இறுதியில் ரூ.413.65 என்று முடிந்தது. இது 7.53 விழுக்காடு உயர்வு. மொத்தம் ரூ.1 கோடியே 12 லட்சம் மதிப்பிற்கு வர்த்தகம் நடந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 67.20 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 18,048.05 ஆக குறைந்தது.

ஆனால் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 49.40,சுமால் கேப் 134.22, புள்ளிகள் அதிகரித்தன. அதே நேரத்தில் பி.எஸ்.இ. 500- 02.44 புள்ளிகள் குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 26 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5276.90 ஆக குறைந்தது.

அதே நேரத்தில் நிப்டி ஜீனியர் 27,பாங்க் நிஃப்டி 24.15,சி.என்.எக்ஸ் மிட் கேப் 4.15, மிட்கேப் 50-4.10 புள்ளிகள் அதிகரித்தன.

ஆனால் சி.என்.எக்ஸ் ஐ.டி 52.95 சி.என்.எக்ஸ் 100- 19.35,சி.என்.எக்ஸ் டிப்டி 36.40, சி.என்.எக்ஸ் 500-11.30 புள்ளிகள் குறைந்தன.

இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில் 12 நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. 18 நிறுவனத்தின் பங்கு விலை குறைந்தது.

விலை அதிகரித்த பங்குகள் :
1) பஜாஜ் ஆட்டரூ.2199.90 (ரூ.25.15)
2) சிப்லா ரூ.184.80 (ரூ.0.95)
3) ஹின்டால்கோ ரூ.184.10 (ரூ.05.60)
4) ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.216.60 (ரூ.05.40)
5) ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி ரூ.1208.10 (ரூ.16.95)
6) ஐ.டி.சி. ரூ.209.60 (ரூ.06.60)
7) மகேந்திரா அண்ட்
மகேந்திரா ரூ.643.35 (ரூ.24.85)
8) என்.டி.பி.சி. ரூ.204.80 (ரூ.00.80)
9) ரான்பாக்ஸி ரூ.396.35 (ரூ.00.20)
10 ) ரிலையன்ஸ் கம்யூனி. ரூ.612.70 (ரூ.01.00)
11) டாடா மோட்டார்ஸ் ரூ.732.55 (ரூ.18.55)
12) டாடா ஸ்டீல் ரூ.821.25 (ரூ.0.275)


விலை குறைந்த பங்கு:
1) ஏ.சி.சி. ரூ.756.05 (ரூ.02.50).
2) அம்புஜா சிமெண்ட் ரூ.115.05 (ரூ.0.80)
3) பார்தி ஏர்டெல் ரூ.880.50 (ரூ.01.10)
4) பி.ஹெச்.இ.எல். ரூ.2216.20 (ரூ.45.15)
5) டி.எல்.எப். ரூ.859.80 (ரூ.19.15)
6) கிராசிம் ரூ.2787.35 (ரூ.26.85)
7) ஹெச்.டி.எப்.சி. ரூ.2900.95 (ரூ.20.40)
8) ஹெச்.டி.எப்.சி. வங்கி ரூ.1557.00 (ரூ.07.10)
9) இன்போசியஸ் ரூ.1553.10 (ரூ.11.65)
10) எல்.அண்ட்.டி . ரூ.3508.70 (ரூ.28.25)
11)மாருதி ரூ.806.00 (ரூ.06.75)
12) ஓ.என்.ஜி.சி. ரூ.1020.80 (ரூ.12.50)
13) ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1696.95 (ரூ.12.55)
14) ரிலையன்ஸ் இன்டஸ். ரூ.2552.00 (ரூ.38.55)
15) சத்யம் ரூ.426.00 (ரூ. 12.20)
16) எஸ்.பி.ஐ. ரூ.2254.95 (ரூ.43.00)
17) டி.சி.எஸ். ரூ.851.95 (ரூ.19.55)
18) விப்ரோ ரூ.414.55 (ரூ.05.70)

வெப்துனியாவைப் படிக்கவும்