மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கிய போது இருந்த நிலை முதல் 10 நிமிடங்களிலேயே மாறிவிட்டது.
ரிலையன்ஸ் பவர் பங்குகளுக்கு போனஸ் பங்கு அறிவிக்கப்பட்டதால், காலையில் வர்த்தகம் தொடங்கும் போது சென்செக்ஸ் 141.57 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 18256.82 ஆக உயர்ந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 45.70 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 5,348.60 ஆக உயர்ந்தது.
ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், இன்போசியஸ், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்ததால், குறியீட்டு எண்கள் அதிகரித்தன.
அதற்கு பிறகு தொடர்ந்து பங்குகளின் விலைகள் சரிந்தது. காலை 11.30 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 77.57 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 18,037.68 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 65.10 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5268 ஆக இருந்தது.
ஆனால் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 65.32, சுமால் கேப் 106.46 புள்ளிகள் அதிகரித்து இருந்தன. பி.எஸ்.இ 500 பிரிவில் உள்ள பங்குகள் 1.29 புள்ளி குறைந்து இருந்தது.
தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்பம், சி.என்.எக்ஸ் 110, டிப்டி ஆகிய பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தன.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பங்குச் சந்தையில் பங்குகளின் விலை அதிகரித்து, குறியீட்டு எண்கள் உயர வாய்ப்பு உள்ளது என்று பங்குச் சந்தை வட்டாரங்கள் கருதுகின்றன.
மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸ் 28.77, நாஸ்டாக் 10.74 புள்ளிகள் குறைந்து இருந்தன. எஸ் அண்ட் பி 1.13 புள்ளிகள் அதிகரித்தது.
ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் ஹாங்காங்கின் ஹாங்சாங் 218.34 மட்டும் குறைந்து இருந்தது. ஜப்பானின் நிக்கி 12.84, சீனாவின் சாங்காய் காம்போசிட் 250.20, சிங்கப்பூரின் ஸ்ரெய்ட் டைம்ஸ் 4.78, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 1.47 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.