மும்பை தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் அதிக அளவு உயர்ந்தன. வர்த்தகம் தொடங்கிய ஐந்து நிமிடத்திலேயே சென்செக்ஸ் 637 புள்ளிகளும், நிஃப்டி 195 புள்ளிகளும் அதிகரித்தன.
இந்த உயர்வுக்கு காரணம் ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், டாடா ஸ்டீல், இன்போசியஸ், பி.ஹெச்.இ.எல், ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் பெட்ரோலியம், டாடா பவர், அம்புஜா சிமெண்ட், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், யூனிடெக், பஞ்சாப் வங்கி ஆகிய பங்குகளின் விலைகள் உயர்ந்ததே.
காலையில் பெட்ரோலிய நிறுவனங்கள்,ரியல் எஸ்டேட், வங்கிகளி்ன் பங்குகளில் அதிக அளவு ஆர்வம் செலுத்துவதை காண முடிந்தது.
காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 620.25 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 17,569.39 ஆக இருந்தது.
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 189.20 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5118.65 ஆக அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட்கேப் 234.48,சுமால் கேப் 222.13,பி.எஸ்..இ 500239.72 புள்ளிகள் அதிகரித்து இருந்தன. தேசிய பங்குச் சந்தையில் எல்லா பிரிவு பங்குளின் குறியீட்டு எண்களும் 1.75 முதல் 4 விழுக்காடு வரை அதிகரித்து இருந்தன.
இந்தியாவில் மட்டுமல்லாது மற்ற நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. அமெரிக்காவின் டோவ் ஜோன்ஸ் 178.83, நாஸ்டாக் 53.89, எஸ் அண்ட் பி 50018.35 புள்ளிகள் அதிகரித்தன.
ஆசிய நாட்டு சந்தைகளிலும் பங்குகளின் விலைகள் அதிகரித்தன. ஹாங்காங்கின் ஹாங்செங் 797.01, சீனாவின் சாங்காய் காம்போசிட் 193.87,ஜப்பானின் நிக்கி 540.51, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 87.21, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 65.67 புள்ளிகள் அதிகரித்தன.
கடந்த இரண்டு வாரங்களாக சர்வதேச நிதி சந்தையில் நிலவி வந்த நெருக்கடி நிலை மாறி, இந்தியாவில் மட்டுமல்லாது, மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளும் முன்னேற்றம் காணப்படுகிறது.