பங்குச் சந்தை 612 புள்ளிகள் சரிவு!

வியாழன், 7 பிப்ரவரி 2008 (19:19 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலை முதலே காணப்பட்ட சரிவு, மதியத்திற்கு பிறகு அதிக அளவில் அதிக அளவானது. இதனால் சென்செக்ஸ் 18 ஆயிரத்திற்கும் குறைந்தது.

காலையில் சென்செக்ஸ், நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகள் தவிர மற்ற பிரிவு பங்குகளின் விலை அதிகரித்தது. இவற்றின் குறியீட்டு எண்களும் உயர்ந்தன.

ஆனால் மதியத்திற்கு மேல் நிலைமை மாறி, இவற்றின் குறியீட்டு எண்களும் படிப்படியாக குறைய ஆரம்பித்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 612.56 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 17,526.93 ஆக முடிந்தது.

இதே போல் நிஃப்டி 189.3 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5,133.25 ஆக முடிவடைந்தது.

அந்நிய நாட்டு பங்குச் சந்தைகளில், குறிப்பாக அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவால் பங்குச் சந்தையின் குறியீட்டு எண்கள் குறைந்ததாக புரோக்கர்கள் தெரிவித்தனர்.

அந்நிய முதலீட்டு நிறுவனங்களும், உள்நாட்டு முதலீட்டாளர்களும் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்தனர்.

உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி, பணப்புழக்கம் அதிகரிப்பது ஆகியவை எவ்வித தாக்கத்தையும் பங்குச் சந்தையில் ஏற்படுத்தவில்லை.

ரிலையன்ஸ் பவர் பங்குகளில் விண்ணப்பித்தவர்களுக்கு, பணம் திருப்பி கொடுக்கப்பட்டு வருகிறது (பங்கு ஒதுக்கப்படாதவர்களுக்கு). இந்த பணம் திருப்பி வழங்கும் போது, இவை பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும் என சென்ற வாரம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பங்குச் சந்தையில் நிலையில்லா தன்மையால் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காண்பிக்க்வில்லை.

இன்று மும்பை பங்குச் சந்தையில் ரூ.6,541 கோடிக்கு வர்த்தகம் நடந்தது (நேற்று ரூ.6,308 கோடி).

தேசிய பங்குச் சந்தையின் முன்பேர சந்தையில் பிப்ரவரி மாத வர்த்தகம் குறியீடு 45.9 புள்ளிகள் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் குறைந்தன. மிட் கேப் 189.62, சுமால் கேப் 210.18, பி.எஸ்.இ-500 233.25 புள்ளிகள் சரிந்தன.

இதே போல் தேசிய பங்குச் சந்தையில் நிப்டி ஜீனியர் 374.95, சி.என்.எக்ஸ் ஐ.டி 130.20 பாங்க் நிப்டி 225.20, சி.என்.எக்ஸ் 100-185.70, சி.என்.எக்ஸ் டிப்டி 154.25, சி.என்.எக்ஸ் 500- 149.20, சி.என்.எக்ஸ் மிட் கேப் 200.40, சி.என்.எக்ஸ் 50-92.40 புள்ளிகள் சரிந்தன.

இன்று மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ல் பிரிவில் உள்ள 30 நிறுவனங்களில் 29 நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. ஒரு நிறுவனத்தின் பங்கு விலை மட்டும் அதிகரித்தது.

விலை அதிகரித்த பங்குகள் :

நிறுவனத்தின் பெயர் பங்கு இறுதி விலை குறைவு

1) ஏ.சி.சி. ரூ.772.70 ரூ.7.85

விலை குறைந்த பங்குகள் :

நிறுவனத்தின் பெயர் : இறுதி விலை : குறைவு

2) அம்புஜா சிமெண்ட் ரூ.117.35 (ரூ.3.30)
3) பஜாஜ் ஆட்டரூ.2278.70 (ரூ.60.75)
4) பார்தி ஏர்டெல் ரூ.862.55 (ரூ.37.85)
5) பி.ஹெச்.இ.எல். ரூ.2019.90 (ரூ.9.10)
6) சிப்லா ரூ.194.75 (ரூ.7.40)
7) டி.எல்.எப் ரூ.844.85 (ரூ.25.00)
8) கிரேசம் ரூ.2819.00 (ரூ.69.75)
9) ஹெச்.டி.எப்.சி ரூ.2900.00 (ரூ.75.85)
10)ஹெச்.டி.எப்.சி வங்கி ரூ.1491.65 (ரூ.6.10)
11) ஹின்டால்கோ ரூ.163.30 (ரூ.9.75)
12) ஹிந்துஸ் யூனிலிவர் ரூ.199.60 (ரூ.5.45)
13) ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ரூ.1105.25 (ரூ.47.60)
14) இன்போசியஸ் ரூ.1480.90 (ரூ.29.70)
15) ஐ.டி.சி ரூ.192.20 (ரூ.7.75)
16) எல்.அண்ட்.டி ரூ.3630.45 (ரூ.150.15)
17) மாருதி ரூ.798.75 (ரூ.31.50)
18) மகேந்திரா அண்ட் மகேந்திரா ரூ.658.65 (ரூ.5.40)
19) என்.டி.பி.சி ரூ.206.40 (ரூ.11.15)
20) ஓ.என்.ஜி.சி ரூ.988.50 (ரூ.38.45)
21) ரான்பாக்ஸி ரூ.373.65 (ரூ.9.70)
22) ரிலையன்ஸ் கம்யூனி ரூ.644.05 (ரூ.37.55)
23) ரிலையன்ஸ் எனர்ஜி ரூ.1987.15 (ரூ.69.30)
24) ரிலையன்ஸ் இன்டஸ் ரூ.2425.00 (ரூ.127.05)
25) சத்யம் ரூ.390.85 (ரூ.17.80)
26) எஸ்.பி.ஐ. ரூ.2155.20 (ரூ.27.90)
27) டாடா மோட்டார்ஸ் ரூ.714.90 (ரூ.21.35)
28) டாடா ஸ்டீல் ரூ.771.40 (ரூ.28.05)
29) டி.சி.எஸ். ரூ.882.95 (ரூ.17.60)
30) விப்ரோ ரூ.409.85 (ரூ.15.15)

வெப்துனியாவைப் படிக்கவும்