பங்குச் சந்தை இன்று எப்படி?

வியாழன், 24 ஜனவரி 2008 (11:01 IST)
மும்பை பங்குச் சந்தையின் உண்மையான நிலை இன்னும் இரண்டொரு நாட்களில் தான் தெரியும். சென்செக்ஸ் 18 ஆயிரம் புள்ளிகளையும், நிஃப்டி 5,400 முதல் 5,500 புள்ளிகளை எட்டும் போது தான், இந்திய பங்குச் சந்தையின் யதார்த்தமான பலம் தெரியும்.

இந்த நிலை எட்டியதற்கு பிறகு, பங்குச் சந்தை இதே நிலவரத்தில் நீடிக்குமா அல்லது தொடர்ந்து முன்னேறுமா என்பது தெரியும். இதை ஏன் கூறுகின்றோம் என்றால் எப்போதுமே தொடர்ந்து கு‌றியீட்டு எண்கள் உயர்வது, பங்குகளின் விலையை அதிகரித்து, இதன் மூலமாக இலாபம் சம்பாதிப்பவர்கள் மூர்க்கத்தன‌த்துடன் இயங்குவதால் தான் பங்கு குறியீட்டு எண்கள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கின்றன.

இவர்கள் தங்களின் இலாப கணக்கை பார்க்க துவங்கும் போது விலைகள் சரிந்து குறியீட்டு எண்கள், அதால பாதாளத்திற்கு செல்கின்றன. நாம் இதை தான் கடந்த சில தினங்களில் கண்கூடாக பார்த்தோம்.

தற்போது புதிய பங்கு வெளியீட்டில் விண்ணப்பித்து, அவர்களுக்கு பங்குகள் ஒதுக்காத பட்சத்தில், செலுத்திய பணம் திரும்ப கொடுக்க வேண்டும். அந்த நேரத்தில் பங்கு சந்தையில் மீண்டும் சலசலப்பு ஏற்படும்.

அமெரிக்க ரிசர்வ் வங்கி முக்கால் விழுக்காடு வட்டியை குறைத்துள்ளது. அதே போல் இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டியை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவ்வாறு ரிசர்வ் வங்கி வட்டியை குறைக்கும் போது மீ்ண்டும் சலசலப்பு ஏற்படும்.

இன்று பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கும் போதே குறியீட்டு எண்கள் 150 முதல் 200 புள்ளிகள் வரை அதிகரித்து இருக்கும். சென்செக்ஸ் 17,750-17,800 என்ற அளவில் வர்த்தகம் துவங்கும் என எதிர்பார்க்கலாம். பிறகு சென்செக்ஸ் 17,515 முதல் 17,140 என்ற அளவில் குறைந்து, மீண்டும் அதிகரிக்கலாம்.

இன்று வங்கி, மின் உற்பத்தி, உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் உள்ள பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குறிப்பாக பாங்க் ஆப் பரோடா, கனரா வ‌ங்கி, ஓரியன்டல் பாங்க், என்.டி.பி.சி, ஜே.பி.ஹைட்ரோ, ஜே.பி.அசோசியெட்ஸ், யூனிடெக், ஐ.வி.சி.ஆர்.எல் இன்ப்ரா, வெல்குஜ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். இதனால் இவைகளின் பங்கு விலை உயர வாய்ப்பு உள்ளது.

நேற்றைய நிலவரம்:

கடந்த ஏழு நாட்களாக இருந்து வந்த நிலையில் திருப்பம் ஏற்பட்டது முதலீட்டாலர்களுக்கு மகிழ்ச்சி அளித்தது. காலையில் வர்ததகம் துவங்கிய போதே குறீயீட்டு எண்கள் அதிக அளவு அதிகரித்து இருந்தன. அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் இதே நிலை நாள் முழுவதும் நீடித்தது. பிற்பகலில் சென்செக்ஸ் 1200 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்து, இறுதியில் 865 புள்ளிகள் உயர்வுடன் 17,594 ஆக முடிந்தது.
சந்தையின் முக்கிய நிகழ்வுகள்.

சென்செக்ஸ் ஒரே நாளில் அதிக அளவு அதிகரித்தது.
அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்த பிறகு அதிக அளவு வர்த்தகம் நடந்தது.
எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் 4 விழுக்காட்டிற்கும் மேல் அதிகரித்தது.
ப்யூச்சர் அண்ட் ஆப்சன் சந்தையில் அதிக இலாபம் எதிர்பார்ப்பு இருந்த்து. இதனால் குறைந்த அளவு வர்த்தகமே நடந்தது.

ஆயினும் ப்யூச்சர் அண்ட் ஆப்சன் சந்தையில் புரோக்கர்கள் குறைந்த அளவே ஈடுபட்டனர். இதனால் வர்த்தகம் குறைவாகவே நடைபெற்றது. வர்த்தகர்களும் அதிக அளவு பங்கு பெறவில்லை. அவர்கள் பழைய கணக்கை முடிப்பதிலேயே கவனம் செலுத்தினார்கள்.
இந்த சந்தையில் ஆர்.என்.ஆர்.எல், ஆர்.பி.எல், ஐ.டி.பி.ஐ, இஸ்பாட், அசோக் லேலண்ட், டி.டி.எம்.எல், ஐ.எப்.சி.ஐ, அர்விந்த் மில்ஸ், ஜே.பி.அசோசியேட்ஸ், எம்.ஆர்.பி.எல், ஹோட்டல் லீலா, ஜே.பி.ஹைட்ரோ, ஓஸ்வால் கெமிக்கல்ஸ், பலராம்பூர் சின்னி ஆகிய பங்குளின் கணக்கு முடிக்கபடவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்