மும்பை தங்கம், வெள்ளி சந்தையில் இன்று காலை பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.385-ம், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.145ம் குறைந்தது.
சர்வதேச சந்தையில் இருந்து வந்த தகவல்களை அடுத்து, மும்பையில் தங்கம், வெள்ளி வாங்குவதற்கு நகை தயாரிப்பாளர்கள், தொழில் துறையின்ர் ஆர்வம் காட்டாத காரணத்தினால் விலைகள் குறைந்தது என வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
டோக்கியோ சந்தையில் தங்கத்தின் விலை கடந்த இரண்டு வாரங்களில் இருந்த அளவை விட இன்று குறைந்தது. டாலருக்கு நிகரான யூரோவின் மதிப்பு குறைந்ததும், பங்குச் சந்தையின் சரிவால், தங்கம் உட்பட விலை உயர்ந்த உலோகங்களில் முதலீடு செய்து இருந்தவர்கள், இதனை விற்பனை செய்தனர் அத்துடன் ஜப்பானில் பங்குச் சந்தையில் பங்குகளின் விலை 4 விழுக்காடுக்கு அதிகமாகவும், சீனாவில் பங்குகளின் விலை 5 விழுக்காட்டிற்கு அதிகமாக குறைந்தது. இதுவும் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் மற்ற விலை உயர்ந்த உலோகங்களை விற்பனை செய்தனர்.
இதனால் இவற்றின் விலை குறைந்தது.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,095 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,045 பார் வெள்ளி 1 கிலோ ரூ.20,085.