ப‌ங்கு‌‌ச் ச‌ந்தை இ‌ன்று எ‌ப்படி?

செவ்வாய், 22 ஜனவரி 2008 (10:20 IST)
இந்தியாவின் பங்குச் சந்தையில் நேற்று வரலாறு காணாத சரிவு ஏற்பட்டது. இதன் வரலாற்றில் கருப்பு திங்கட் கிழமையாக மாறி விட்டது. வாரத்தின் முதல் நாளான நேற்று யாரும் எதிர்பாராத வகையில் மும்பை பங்குச் சந்தையினால் வர்த்தகம் நடந்த போது ஒரு நிலையில் சென்செக்ஸ் 17 ஆயிரம் புள்ளிகளாக சரிந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 5,000 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழ் இறங்கியது.

இந்த சரிவினால் முதலீடு செய்திருந்தவர்களுக்கு நேற்று மட்டும் சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. (இவர்கள் வசம் இருந்த பங்குகளின் மதிப்பு குறைந்தது). ப்யூச்சர் சந்தையிலும் பங்குகளின் மதிப்பு குறைந்தது. இதில் கணக்கு முடிக்காமல் 12 கோடி பங்குகள் (மதிப்பீடு கணக்கு) இருந்தன. 50 பங்குகளின் விலை 20 விழுக்காட்டிற்கும் குறைவாக இருந்தது. நேற்று பங்குச் சந்தைகளில் மொத்தம் ரூ.11,60,576.16 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.

நேற்று காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய போதே, எல்லா பிரிவு பங்குகளின் விலையும் குறைந்தன. குறிப்பாக மின் உற்பத்தி, உலோக உற்பத்தி நிறுவனங்கள், இயந்திரம் மற்றும் தளவாட உற்பத்தி, வாகன உற்பத்தி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகளவு பாதிக்கப்பட்டன.

பவர்கிரிட் கார்ப்பரேஷன், என்.டி.பி.சி, ஆர்.என்.ஆர்.எல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, பரஷ்வநாத் டெவலப்பர், ரிலையன்ஸ், நாகர்ஜூனா பெர்டிலைசர்ஸ், டி.டி.எம்.எல் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை அதிக அளவு, முதலீட்டாளர்கள் விற்பனை செய்தனர். இதற்கு காரணம் இதன் விலைகள் ப்யூச்சர் சந்தையில் கடுமையாக குறைந்ததுதான்.

இன்று (செவ்வாய்க் கிழமை) எப்படி இருக்கும்?

இன்றும் நேற்று மாதிரியே பலர் த‌ங்க‌‌ளி‌ன் பங்குகளை விற்பனை செய்வார்கள். அதிக அளவில் பங்குகளை யாரும் வாங்குவதில் ஆர்வம் காண்பிக்க மாட்டார்கள். இன்று ஒவ்வொரு பங்கும் அதன் குறைந்தபட்ச விலைக்கு வந்து, இதன் வர்த்தகம் நிறுத்தும் சூழல் உருவாகும். ஆனால் இந்த சூழ்நிலை ஏற்படாது என்று நம்பலாம்.

ஏனெனில் ப்யூச்சர் சந்தையில் எந்த அளவிற்கு பங்குகளின் விலை குறைய வேண்டுமோ, அந்த அளவிற்கு குறைந்து விட்டது. இன்று இதில் பங்குகளை வாங்க துவங்குவார்கள். இதனால் வர்த்தகம் நிறுத்திவைக்கும் அளவிற்கு விலைகள் குறையாது.

இன்று பங்குச் சந்ததையின் புரோக்கர்கள் தங்கள் வசம் உள்ள பங்குகளை விற்பனை செய்ய முயற்சிப்பார்கள். இன்று பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் துவங்கும் போதே சென்செக்ஸ் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 150 முதல் 200 புள்ளிகள் குறைந்து சென்செக்ஸ் 17,450 என்ற அளவில் துவங்கும்.

இதை நிலை நீடிக்கவில்லை என்றால் சென்செக்ஸ் 17,190 முதல் 16,600 வரை குறைய வாய்ப்பு உண்டு.
சென்செக்ஸ் 17,845 புள்ளிகளுக்கும் மேல் அதிகரித்தால், பங்குகளை வாங்க ஆர்வம் காட்டுவார்கள். இதனால் சென்செக்ஸ் 18,000 முதல் 18 ஆயிரத்து 190 வரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

இன்று சென்செக்ஸ் 17,845 புள்ளிகளை தாண்டினால், வங்கி, மின் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளில் அதிக கவனத்தை ஈர்க்கும். ஆர்.என்.ஆர்.எல், நாகர்ஜூனா பெர்டிலைசர், பாட்டா இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேஷன், சத்யம் கம்ப்யூட்டர்ஸ், ‌ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஜே.பி.அசோசியேட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளில் அதிக அளவு வர்த்தகம் நடக்கும் என எதிர்பார்க்கலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்