, தேசிய பங்குச் சந்தைகள், இன்று கடும் சரிவை சந்தித்தன.
மதியம் 1 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,424.37 புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 17,589.33 புள்ளிகளாக இருந்தது. மிட் கேப் 836.68, சுமால் கேப் 973.67, பி.எஸ்.இ-500 720.35 புள்ளிகள் சரிந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 466.25 புள்ளிகள் சரிந்து குறியீட்டு எண் 5,239.05 ஆக குறைந்தது. மற்ற எல்லா பிரிவில் உள்ள பங்குகளும் கடுமையான சரிவை சந்தித்தன. இவை 5.40 விழுக்காட்டில் இருந்து அதிக பட்சமாக 10.33 விழுக்காடு குறைந்தது.
அமெரிக்காவின் நாஸ்டாக் 6.88, எஸ் அண்ட் பி 500 பிரிவு 8.06 புள்ளிகள் குறைந்தது. ஹாங்காங்கின் ஹாங்செங் 714.60, சிங்கப்பூரின் ஸ்டெர்ட்டைம்ஸ் 78.47, ஜப்பானின் நிக்கி 520.62 புள்ளிகள் குறைந்தன.
மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் துவங்கும் போதே எல்லா குறியீ்ட்டு எண்களும் சரிவை சந்தித்தன. காலை 10 மணி அளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை இறுதி நிலவரத்தைவிட 436.70 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 18,577.00 ஆக இருந்தது. (வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 19,013.70) .
இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டியும் 138.30 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 5567 ஆக இருந்தது. (வெள்ளிக் கிழமை இறுதி நிலவரம் 5,705.30).