மும்பையில் தங்கம் வெள்ளி விலை குறைந்தது!

வெள்ளி, 18 ஜனவரி 2008 (19:39 IST)
இன்று மாலை வர்த்தகம் முடியும் நேரத்தில் 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.95-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.65-ம் குறைந்தது.

காலையில் வர்த்தகம் தொடங்கும் போது பார் வெள்ளியின் விலை 1 கிலோ ரூ.20,355 ஆக இருந்தது. பிறகு சிறிது விலை அதிகரித்தது. ஆனால் வாங்குவது குறைவாக இருந்ததால் இறுதியில் 1 கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.20,390 ஆக முடிந்தது. இது நேற்றைய இறுதி விலையை விட ரூ.65 குறைவு.

அதே போல் 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை காலையில் ரூ.11,205 ஆக துவங்கியது. 10 கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ.11,155 ஆக துவங்கியது. பிறகு விலை குறைந்து இறுதயில் நேற்றைய விலையை விட 10 கிராமுக்கு ரூ.95 குறைந்தது.

இன்றைய இறுதி விலை நிலவரம்;

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,195 (நேற்று 11,290)
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,145 (11,240)
பார் வெள்ளி கிலோ ரூ.20,390 (20,455).

வெப்துனியாவைப் படிக்கவும்