மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் இன்று 24 காரட் தங்கத்தின் 10 கிராமுக்கு ரூ.190-ம், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.280-ம் அதிகரித்தது.
இன்று நகை உற்பத்தியாளர்கள் தங்கத்தை அதிக அளவு வாங்கியதால், தங்கத்தின் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் நேற்று 1 பீப்பாய் 99 டாலராக அதிகரித்தது. இதனால் பல நாடுகளில் பணவீக்கம் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதால், தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கு அதிகரித்தது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தது.
நேற்று சிங்கப்பூர் சந்தையில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 861 அமெரிக்க டாலராக உயர்ந்தது.
நியுயார்க் சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 855.10/855.90 டாலராக இருந்தது. (நேற்றைய விலை 855.70/856.50).
வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 15.16/15.21 டாலராக இருந்தது. (நேற்றைய விலை 15.17/15.22).
இன்று காலை விலை நிலவரம்
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,995 22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.10,950 பார் வெள்ளி 1 கிலோ ரூ.19,915