மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 359.93 புள்ளிகள் அதிகரித்தது.
இன்று உலோக உற்பத்தி, ரியல் எஸ்டேட், வங்கி பிரிவில் உள்ள பங்குகளை அதிக அளவு முதலீட்டு நிறுவனங்கள் வாங்கின.
குறிப்பாக டாடா ஸ்டீல், ஸ்டெர்லைட், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், இன்போசியஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்தது.
இன்று சென்செக்ஸ் 359.93 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 19,363.19 புள்ளிகளாக அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 128.15 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5,762.75 புள்ளிகளாக உயர்ந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 191.01, சுமால் கேப் 136.27, பி.எஸ்.இ-500 184.87 புள்ளிகள் அதிகரித்தன. இதே போல் தேசிய பங்கு சந்தையின் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.
சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் எல்.அண்ட்.டி, ஓ.என்.ஜி.சி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, பார்தி ஏர்டெல், கிரேசம், டி.எல்.எப், ஹின்டால்கோ, ஐ.டி.சி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரான்பாக்ஸி, எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், சிப்லா, ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, என்.டி.பி.சி, சத்யம், எஸ்.பி.ஐ, விப்ரோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி,டி.சி.எஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.
ஏ.சி.எல், பி.ஹெச்.இ.எல், ஹிந்துஸ்தான் யூனிலிவர், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.