மும்பை பங்குச் சந்தையிலும், தேசிய பங்குச் சந்தையிலும் கடந்த நான்கு நாட்களாக இருந்த நிலைமை இன்று மாறியது. இன்று காலையில் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் அதிகரித்து, குறியீட்டு எண்களும் உயர்ந்தன.
மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் 331.42 புள்ளிகள் அதிகரித்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 111.15 புள்ளிகள் அதிகரித்தது.
காலை 11.15 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 223.04 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 18,749.36 புள்ளிகளாக இருந்தது. இதே போல் மிட் கேப் 156.64 புள்ளிகளும், சுமால் கேப் 156.77 புள்ளிகளும், பி.எஸ்.இ-500 111.11 புள்ளிகளும் அதிகரித்து இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 75.25 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 5594.60 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் எல்லா பிரிவு குறியீட்டு எண்களும், நேற்றைய இறுதி நிலவரத்தை விட உயர்ந்து காணப்பட்டது.
இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 19 ஆயிரம் புள்ளிகளை தொட்டு விடும் என்ற எதிர்பார்ப்பு பங்குச் சந்தை வட்டாரங்களில் நிலவுகிறது.
சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி, பஜாஜ் ஆட்டோ, பார்தி ஏர்டெல், கிரேசம், ஹெச்.டி.எப்.சி, ஹிந்துஸ்தான் யூனிவர், மகேந்திரா அண்ட் மகேந்திரா, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, பி.ஹெச்.இ.எல், டி.எல்.எப், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இன்போசியஸ், ஐ.டி.சி, மாருதி என்.டி.பி.சி, எஸ்.பி.ஐ, டாடா ஸ்டீல், ஹின்டால்கோ, ஐ.டி.சி, எல்.அண்ட்.டி ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் அதிகரித்தது.
சிப்லா, ஹெச்.டி.எப்.சி வங்கி, ஓ.என்.ஜி.சி, விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் குறைந்தன.