டாலர் மதிப்பு உயர்வு!

புதன், 21 நவம்பர் 2007 (19:52 IST)
வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 பைசா குறைந்தது.

இன்று காலையில் 1 டாலர் ரூ.39.36/39.38 என்ற அளவில் வர்த்தகம் தொடங்கியது. டாலர் வரத்து குறைவாக இருந்ததால் 1 டாலரா ரூ.39.36 பைசா முதல் ரூ.39.42 பைசா வரை விற்பனை செய்யப்பட்டது. ஏற்றுமதியாளர்கள் அதிகளவு டாலர் விற்பனை செய்ததால், இந்திய ரூபாயின் மதிப்பு சிறிது அதிகரித்தது.
இறுதியில் 1 டாலர் ரூ.39.39/39.40 ஆக முடிந்தது. நேற்றைய விலை 1 டாலர் ரூ.39.35/36.

ரிசர்வ் வங்கி 1 டாலரின் மதிப்பு ரூ.39.39 பைசா என நிர்ணயித்தது. இது நேற்றைய விலையை விட 5 பைசா குறைவு.

வெப்துனியாவைப் படிக்கவும்