டாலர் மதிப்பு 2 பைசா உயர்வு

புதன், 21 நவம்பர் 2007 (14:19 IST)
அந்நியச் செலவாணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 பைசா குறைந்தது. இன்று காலையில் 1 டாலர் ரூ.39.36/ 39.38 என்று விற்பனையானது. நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ. 39.35/ 39.36.

இன்று 1 டாலர் ரூ. 39.36 முதல் ரூ. 39.39 என்ற விலையில் வர்த்தகம் நடைபெறுகிறது.

பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து டாலராக மாற்றும் என்ற கருத்து, பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை ஏற்றம் ஆகிய காரணங்களினால் டாலரின் மதிப்பு அதிகரித்தாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்