டாலர் மதிப்பு உயர்வு!

Webdunia

புதன், 17 அக்டோபர் 2007 (16:32 IST)
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 50 பைசா குறைந்தது.

பங்கச் சந்தையில் காலையில் பங்கு விலை குறைந்தது. இதனால் குறியீட்டு எண் 1,743 புள்ளிகள் சரிந்தது. பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பார்ட்டிசிப்பரி நோட் என்ற முறையில் முதலீடு செய்கின்றன.

இந்த வகையான முதலீடு எந்த விநாடியும் திரும்ப பெற முடியும். இதற்கு கட்டுப்பாடு விதிப்பதாக பங்குச் சந்தை கட்டுப்படுத்தும் அமைப்பான செபி அறிவித்தது. இதனால் பங்குகள் விற்கும் போக்கு அதிகரித்தது.

இதன் காரணமாக டாலர் வரத்து குறைந்து, நாட்டை விட்டு வெளியேறும் என்ற அச்சத்தால் டாலரின் மதிப்பு அதிகரித்து, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்