முதலீட்டாளர்களுக்கு பொறுமை தேவை!

வியாழன், 6 மார்ச் 2008 (16:34 IST)
பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.

மத்திய பட்ஜெட் அடுத்த வருடம் நடைபெற உள்ள தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் பருவமழை நன்கு பொழியும் என்ற நம்பிக்கையுடன் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இருந்து, பல விஷயங்கள் தெளிவு படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவும் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

பங்குச் சந்தை : பங்குச் சந்தையில் பங்குப் பரிவர்த்தனை மீதான வரியில் மாற்றமில்லை. அதிக அளவு வர்த்தகம் நடைபெறும், பண்டக பரிவர்த்தனை சந்தையின் வர்த்தகம் மீது வரி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. குறுகிய கால முதலீடு மீதான வரி 15 விழுக்காடாக அதிகரித்திருப்பது அதிருப்தியை உண்டாக்கும் (முன்பு இந்த வரி 10 விழுக்காடாக இருந்தது).

இந்த பட்ஜெட் அறிவிப்புகளினால் கடன் பத்திரங்கள் மீதான முன்பேர வர்த்தகம், அந்நியச் செலவாணி முன்பேர வர்த்தகம் அதிகரிக்கும். பங்கு பரிவர்த்தனைகான முத்திரை வில்லை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. முதலீடு, பங்குகளை வாங்கி விற்பனை செய்வது உட்பட எல்லா வகை பரிமாற்றத்திற்கும் பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பரஸ்பர நிதிகள் (மியூச்சுவல் பண்ட்) : பரஸ்பர நிதிகளுக்கு சென்ற வருடத்தைப்போல், இந்த வருடம் எந்த சலுகையும் இல்லை. குறுகியகால முதலீடு இலாபத்தின் மீதான வரி, 15 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் குறுகிய காலம் முதலீடு செய்பவர்கள், நீண்டகால முதலீட்டாளர்களாக மாறுவார்கள். இதனால் பரஸ்பர நிதி நிறுவனங்கள் பயன் பெறும்.

அத்துடன் " யூலிப்" எனப்படும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் திட்டத்துடனான காப்பீடு திட்டங்களுக்கு சேவை வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரியை பரஸ்பர நிதி நிறுவனங்கள் ஏற்கனவே செலுத்தி வருகின்றன. தற்போது யூலிப் திட்டங்களுக்கு சேவை வரி விதித்திருப்பது, பரஸ்பர நிதி நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்களுடன் சம அளவில் போட்டியிட முடியும்.

நல திட்டங்கள் : சென்ற வருடத்தைவிட கல்விக்கு ஒதுக்கீடு 15 விழுக்காடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் ரூ.34 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறைக்கு சென்ற வருடத்தை விட ஒதுக்கீடு 20 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது. இந்த துறைக்கு ரூ.16,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரத் நிர்மான் திட்டத்திற்கு ரூ.31 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற வீட்டு வசதி, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தொழிலாளர்களின் காப்பீடு, வேலை வாய்ப்பு போன்ற நல திட்டங்கள் அதிகரிக்கும்.

விவசாய கடன் தள்ளுபடி : இந்த பட்ஜெட்டில் விவசாய கடன் ரூ.60,000 கோடி தள்ளுபடி என்ற அறிவிப்புதான் முக்கியமாக வலியுறுத்தி கூறப்பட்டுள்ளது. இது அடுத்த தேர்தலை மனதில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்க கடன் தள்ளுபடி அறிவிப்பு, அடுத்த வருடங்களிலும் பல விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில் அடுத்து ஆட்சிக்கு வரும் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு, நாட்டின் பொருளாதார நிலைமையை கவனத்தில் கொள்ளாமல், தேர்தலில் வாக்குகளை கவருவதற்காகப் பல சலுகைகளை அறிவிப்பார்கள்.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விவசாய கடன் தள்ளுபடி, ஏற்கனவே வர்த்தக வங்கிகளில் வசூலாகமல் நிலுவையில் உள்ள கடன்களில் 4 விழுக்காடாகும். இந்த வங்கிகளில் வசூலாகமல் நிலுவையில் உள்ள விவசாய கடன்களில் 25 விழுக்காடாகும்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டதால் என்ன நடந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மாநில மின்சார வாரியங்கள் திவாலாகிவிட்டன. புதிய மின் உற்பத்தி திட்டங்கள் தொடங்கப்படவில்லை. இதனால் நமது நாடு அதிக அளவு மின் பற்றாக்குறை உள்ள நாடாக மாறிவிட்டது.

விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி அறிவிப்பால் சுமால் 4 கோடி விவசாயிகள் பலன் அடைவார்கள். எனவே இது தேர்தல் அறிவிப்புதான்.

இப்பொழுது கடன் தள்ளுபடி செய்யப்படும் தொகையை, ஏற்கனவே விவசாயிகள் செலவழித்துவிட்டார்கள். இதனால் இப்பொழுது வாங்கும் சக்தி உடனடியாக அதிகரித்துவிடாது. சில காலத்திற்கு பிறகு அசலும் வட்டியும் சேர்ந்து சந்தையில் பொருட்களை வாங்குவதற்கு பயன்படும்,.

நிதி நிலை : தற்போதைய கணக்கு பதிவு செய்யும் முறையில் வரவு-செலவு கணக்கு சரியாகவே இருக்கும். ஆனால் இது பெட்ரோலிய நிறுவனங்களுக்கு கொடுக்கும் கடன் பத்திரங்கள், உணவு மானியம், உர மானியம் மற்றும் ஆறாவது சம்பள கமிஷனால் ஏற்படும் கூடுதல் செலவு, இத்துடன் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.60,000 கோடி கடன் தள்ளுபடி ஆகியவை கணக்கில் எடுகத்கப்படாமல் உள்ளன. இதை எல்லாம் தவிர்ததுவிட்டு நிதி அமைச்சர் 3.1 விழுக்காடு வருவாய் பற்றாக்குறை உள்ள பட்ஜெட்டை சமர்ப்பித்துள்ளதற்கு, நிதி அமைச்சரை பாராட்டலாம்.

உற்பத்தி வரி மாற்றம்: வாகன உற்பத்தி துறைக்கு உற்பத்தி வரி குறைத்து இருப்பதற்கு ஆட்டோ மற்றும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு பலன் அளிக்கும். இதன் விலை குறைவதால் இந்த வாகனங்களை வாங்குபவர்கள் இலாபம் அடைவார்கள். மருந்து உற்பத்தி நிறுவனங்களும் உற்பத்தி வரி குறைப்பை வரவேற்கும். பெட்ரோலிய நிறுவனங்கள் பொருளின் மதிப்பின் மீது விதிக்கப்படும் வரிக்கு பதிலாக குறிப்பிட்ட விழுக்காடு வரி விதிக்கப்படும் என மாற்றியுள்ளதால் பலன் அடையும். இதன் எதிர்கால வளர்ச்சிக்கு பயனளிக்கும்.

நேரடி வரி : வருமான வரி குறைக்கப்பட்டு இருப்பதால் வருடத்திற்கு ரூ.1,50,000 வருவாய் உள்ளவர்களுக்கு ரூ.4,000 வரை மீதமாகும். ூ.5 இலட்சம் வரை வருவாய் உள்ளவர்களுக்கு ரூ.50,000 வரை மீதமாகும். பெற்றோர்களுக்கு உடல் நல காப்பீடிற்கு செலுத்தும் கட்டணம் வருமான வரி சட்டம் 80 டி விதியின் கீழ் வரி தள்ளுபடி கணக்கில் சேர்க்கலாம் என்று அறிவித்து இருப்பது வரவேற்க வேண்டிய அம்சம். கூடுதல் வரி, நிறுவன வரி குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் இவை மாற்றப்படவில்லை. பங்கு ஈவு தொகை மீது இரட்டை வரிமுறையை தவிர்க்க மீண்டும் வருமான வரி சட்டத்தில் 80 எம் பிரிவு கொண்டுவரப்பட்டுள்ளது.

சேவை வரி : பணவீக்கத்தை கருத்தில் கொண்டு சேவை வரி 12.5 விழுக்காடு நீடிக்கும் என அறிவித்து இருப்பது வரவேற்க வேண்டிய அம்சம். 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து மத்திய விற்பனை வரி நீக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும். பல்வேறு சேவைகளில் ஈடுபட்டுள்ள சிறிய நிறுவனங்களின் வர்த்தகம் வருடத்திற்கு ரூ.10 லட்சத்திற்குள் இருந்தால் வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் 65 ஆயிரம் சிறிய நிறுவனங்கள் பயன் பெறும். சேவை வரிவிதிப்பில், பல்வேறு புதிய சேவைகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

Courtesy : personalfinancewindow.com

வெப்துனியாவைப் படிக்கவும்