தமிழகத்தின் ஒரு சில இடங்களில் ஜனவரி 5ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழகத்தில் வறண்ட வானிலையே நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போதைய வானிலை கணிப்பின்படி தமிழகத்தின் ஒரு சில இடங்களில் ஜனவரி 5ஆம் தேதி முதல் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பும், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் உள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஜனவரி 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த மழையும், இதர பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் 15 அல்லது 16ம் தேதி மழை தொடர்ந்தால் 19ஆம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது. மேலும், பிப்ரவரி மாத இறுதிக்குள் சேதம் ஏற்படுத்தும் அளவில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஜனவரி மாதத்தில் நிலநடுக்கத்திற்கான வாயப்புள்ள தேதிகள் ஜனவரி 6, 19, 26 ஆகும்.