கோபி : மல்பரி தோட்டங்களுக்கு மண் புழு உரம் இடவேண்டும் என்று பட்டு வளர்ச்சித் துறை மண்டல இணை இயக்குனர் சந்திரசேகரன் கூறினார்.
மத்திய பட்டு வாரிய ஆராய்ச்சி விரிவாக்க மையத்தின் சார்பில் வெண்பட்டு விவசாயிகளின் தொழில்நுட்ப விழிப்புணர்வு முகாம் ஈரோடு பட்டு வளர்ச்சித் துறை மண்டல இணை இயக்குனர் ஆர்.சந்திரசேகரன் தலைமையில் கோபியில் புதன்கிழமை நடைபெற்றது.
அதில் சந்திரசேகரன் பேசுகையில், தற்போது பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 முட்டை தொகுதியில், 50 ஆயிரம் உதிரி முட்டைகள் இருக்கும். இந்த எண்ணிக்கையை 60 ஆயிரமாக அதிகரித்து வழங்கப்படுகிறது.
இதனால் பட்டுக்கூடு விவசாயிகள் தங்கள் மல்பரி தோட்டங்களின் அளவையும், புழு வளர்ப்பு மையம் நடத்தி வருபவர்கள் அவற்றின் அளவையும் அதிகரிக்க வேண்டும். விவசாயிகள் தங்கள் தோட்டங்களின் மண் வளத்தை பாதுகாக்க வேண்டும்.
இதற்காக தொழு உரம், மண்புழு உரம் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.