ஈரோடு மாவட்டத்தில் நெற்பயிர் அறுவடை துவக்கம்

செவ்வாய், 30 டிசம்பர் 2008 (13:18 IST)
ஈரோடு மாவட்டத்தில் தற்போது நெற்பயிர் அறுவடை துவங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனப்பகுதியில் சுமார் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்துள்ளனர். வாய்க்கால் தண்ணீரை அடிப்படையாக கொண்டு நடவு செய்யப்பட்ட இந்த நெற்பயிர்கள் நடவு செய்த சில நாட்களில் புயல்மழையால் பாதிக்கப்பட்டது.

அதற்கு பின் கடும் மூடுபனியால் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக விவசாயிகள் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக பூச்சி மருந்து பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது இதில் 75 சதவீத நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

கூலி ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பல இடங்களில் விவசாயிகள் நெற்பயிர் அறுவடை செய்ய இயந்திரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்