காவிரி ஆற்றின் குறுக்கில் கட்டப்பட்டுள்ள மேட்டூர் ஸ்டான்லி அணையின் நீர் மட்டம் இன்று காலை 88.88 அடியாக இருந்தது. அணையின் மொத்தக் கொள்ளளவு 120 அடி ஆகும்.
அணைக்கு விநாடிக்கு 3,111 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 5,997 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்லணையில் இருந்து காவிரியில் விநாடிக்கு 2,316 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வெண்ணாறில் வினாடிக்கு 510 கன அடியும், கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 1,608 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.