புதுக்கோட்டை: வாழைக்கு பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது.
தோட்டக்கலைத் துறை மூலம், தேசிய பயிர்க் காப்பீடு திட்டத்தின் மூலம் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் கீழ்கண்ட ஐந்து வட்டார விவசாயிகள் சேரலாம்.
இதற்காக 155 ஹெக்டேரில் வாழை காப்பீடு செய்ய அரசு ரூ 18.65 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. காப்பீடு தொகைக்கு 10.75 விழுக்காடு மானியம் வழங்கப்படுகிறது.
கடன் பெற்றுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் 50% மானியத்தொகையாக ரூ. 11,714 வழங்கப்படும். இந்த காப்பீடு திட்டத்தில் சேர அடுத்த ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
கடன் பெறாத விவசாயிகள் அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.2,17,928 வரை காப்பீடு செய்து கொள்ளலாம். கடன்பெறாத சிறு, குறு விவசாயிகளுக்கு 55% மானியமாக ரூ. 12,885 வழங்கப்படும்.
இதற்காக விவசாயிகள் காப்பீடு கட்டமாக 1 ஹெக்டேருக்கு ரூ.1 0,542 செலுத்த வேண்டும். இதற்கு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கி வட்டாரத்தில் பூவாத்தகுடி. கரம்பக்குடி வட்டாரத்தில் கரம்பகுடி, மழையூர், கந்தர்வகோட்டை வட்டாரத்தில், கல்லாகோட்டை, புதுநகர், கந்தர்கோட்டை, புதுகை வட்டாரத்தில் வாராப்பூர், திருவரங்குளம் வட்டாரத்தில் ஆலங்குடி, கீரமங்கலம், வெண்ணாவல்குடி, வளநாடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சேர்ந்து பயன்பெறலாம் என்று தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.