வடகிழக்கு பருவ மழை தீவிரமாகு‌ம் - மழைராஜ்

புதன், 17 டிசம்பர் 2008 (20:03 IST)
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் பாம்ப‌ன் அருகே மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தீவிரமடையும் நிலையில் உள்ளதஎ‌ன்றமழகு‌றி‌த்தஆ‌ய்வசெ‌ய்துவரு‌மமழைரா‌ஜகூ‌றியு‌ள்ளா‌ர்.

எனவே தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை மேலும் தொடர்ந்து பெய்வதற்கான சாத்தியக்கூறுக‌ள் உள்ளன எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதனால் தென் மாவட்டங்களிலும், நாகை, தஞ்சை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் 19 முதல் 22 ஆம் தேதி வரை பலத்த மழையும், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மழை தேதி கணிப்பின்படி, டிசம்பர் மாதம் 18 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளது.

தற்போதைய வானிலை கணிப்பின்படி தென் தமிழகம், நாகை, தஞ்சை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில் வடகிழக்கு பருவ மழை டிசம்பர் 29 ஆம் தேதிக்கு பிறகே குறைய வாய்ப்புள்ளது. அதுவரை இலேசானது முதல் பலத்த பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்