ஈரோடு மாவட்டத்தில் கரும்பு வெட்டும் பணி துவக்கம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கரும்பு வெட்டும் பணி துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம் தாலுக்காவில் சுமார் ஐந்து லட்சம் ஏக்கருக்கு மேல் கரும்பு பயிரிட்டுள்ளனர். இந்த கரும்புகள் அனைத்தும் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலைக்கும், ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலைக்கும் வெட்டப்படுகிறது. தற்போது பயிரிட்டுள்ள கரும்புகளில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் உள்ள கரும்புகள் அறுவடைக்கு தயாராகி வெட்டும் நிலையில் உள்ளது.

webdunia photoWD
இதற்கிடையில் கரும்பு விவசாயிகள் கரும்பு டன் ஒன்றுக்கஇரண்டாயிரம் ரூபா‌யவழங்ககோரி கரும்பு வெட்டு நிறுத்த போராட்டம் அறிவித்திருந்தனர். இதற்கிடையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஈரோடு மாவட்ட ஆ‌ட்‌சிய‌ரமுன்னிலையில் ஆலை நிர்வாகிகளுக்கும், கரும்பு விவசாயிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் தற்போது கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.1,260 கொடுக்க பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை நிர்வாகம் உறுதியளித்தது.

இது தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளை விட அதிகவிலை என்பதால் கரும்பு வெட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பான்மையான விவசாயிகள் தங்கள் கரும்புகளை ஆலைக்கு வெட்ட முடிவு செய்தனர்.

தற்போது சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி பகுதியில் விவசாயிகள் கரும்பு வெட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பணியின்றி இருந்த கரும்பு லாரிகள் மற்றும் டிராக்டர்கள் கரும்பு பாரம் ஏற்றி வரத்தொடங்கியுள்ளது.