காலிபிளவர் விலை வீழ்ச்சி

புதன், 17 டிசம்பர் 2008 (15:49 IST)
தேனி: தேனி பகுதியில் காலிபிளவர் விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர்.

தேனி அருகே குன்னூர், அரப்படித்தேவன்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் சுமார் 200 ஏக்கருக்கு மேல் காலிபிளவர் சாகுபடி செய்துள்ளனர்.

சென்ற ஆண்டு இதே நேரத்தில் 20 காலி பிளவர் விலை ரூ. 250 முதல் ரூ.300 வரை இருந்தது.

சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக காலிபிளவர் வளர்ச்சியின்றி சிறிதாக உள்ளது. 20 காலிபிளவிர் ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகிறது.

இதனால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்