சிதம்பரம்: விவசாயிகளுக்கு மானிய விலையில் உளுந்து விதை வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி இயக்குநர் இ.தனசேகர் கூறியுள்ளார்.
பரங்கிப்பேட்டை வட்டாரத்திற்குட்பட்ட சிதம்பரம், பரங்கிப்பேட்டை மற்றும் பின்னத்தூர் விரிவாக்க மையங்களில் நஞ்சைத் தரிசுக்கேற்ற ரகமான டி.ஏ.யூ.1 உளுந்து விதை தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
டி.ஏ.யூ.1 ரக உளுந்து விதையின் விலை ரூ.56 ஆகும். தேசிய உணவு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ், மானிய விலையில் உளுந்து விதை வழங்கப்படும். இந்த விதைகளை பரங்கிப்பேட்டை வட்டார விவசாயிகள் வாங்கி பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.