வெற்றிலைப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 2 லட்சம் நிவாரணம்
திங்கள், 15 டிசம்பர் 2008 (13:17 IST)
பாபநாசம்: பாபநாசம் ஒன்றியத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெற்றிலைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. இரண்டரை லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் தமிழக முதல்வருக்கு, வெற்றிலை சாகுபடி செய்துள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாபநாசம் பகுதியில் ராஜகிரியில் சுமார் 60 க்கும் அதிகமான ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் பெய்த தொடர் மழையால் வெற்றிலைக் கொடிகள் தரையில் சாய்ந்து நீரில் மூழ்கி அழுகிவிட்டன.
இதனால் வெற்றிலை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிப்பிற்குள்ளானதோடு, ஆயிரத்திற்கும் மேல்பட்ட வெற்றிலைத் தொழிலாளர்களும் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட வெற்றிலைப் பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. இரண்டரை லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.