திண்டுக்கல்: கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால், ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையின் பாசனக் குளங்கள் நிரம்பின.
பரப்பலாறு அணையின் பாசனவசதி பெறும் குளங்களாக ஒட்டன்சத்திரத்தில் உள்ள முத்து பூபாலசமுத்திரம், பெருமாள்குளம், சடையன்குளம், செங்குளம், ராமசமுத்திரக்குளம், ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகியவை உள்ளன.
சில வாரங்களுக்கு முன் தொடர் மழை பெய்தபோதும், இக்குளங்கள் நிரம்பவில்லை. இந்நிலையில், பரப்பலாறு அணைப் பகுதியில் தொடர் மழை பெய்ததால், அணையின் நீர்மட்டம் உயர்ந்தது.
இந்நிலையில், பாசனத்திற்காக அணை திறந்து விடப்பட்டதால் பெரும்பாலான குளங்கள் நிரம்பின.
மலைப்பகுதியில் தொடர்ந்து மழைபெய்து வருவதால், இடையகோட்டை நங்காஞ்சி அணைக்கு உபரிநீர் திறந்து விடப்படும் எனப் பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.