கோவை: கோவை கொடிசியா அரங்கில் இந்தியன் விவசாயக் கண்காட்சி நேற்று துவங்கியது.
இந்த கண்காட்சியை குளோபல் விஷன் நிறுவனம் நடத்துகிறது. இது மூன்று நாட்கள் நடைபெறும்.
விவசாய கண்காட்சியை வேளாண் பல்கலை. துணைவேந்தர் சி.ராமசாமி தொடங்கி வைத்தார்.
இந்த கண்காட்சியில் சொட்டுநீர் பாசன உபகரணங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், விவசாய இயந்திரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், சூரிய மின்வேலிகளை அமைத்து தரும் நிறுவனங்கள் ஆகியவை கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.
இத்துடன் டிராக்டர், மோட்டர் பம்ப், பூச்சி மருந்து தெளிப்பான், பேக்கிங் இயந்திரங்கள் ஆகியவை தயாரிக்கும் நிறுவனங்களும், இயற்கை உரங்கள் மற்றும் கலப்பின விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களும் கலந்து கொண்டன.