கிருஷ்ணகிரி அணை திறப்பு

வெள்ளி, 12 டிசம்பர் 2008 (12:07 IST)
கிருஷ்ணகிரி: இரண்டாம் போக பாசனத்துக்காக கிருஷ்ணகிரி அணையின் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் மூலம் நேற்று முன்தினம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

கிருஷ்ணகிரி அணையின் இடது மற்றும் வலது புறக் கால்வாய்கள் மூலம் புதன்கிழமை முதல் தொடர்ந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படம்.

இதன் மூலம் பெரியமுத்தூர், சுண்டேகுப்பம், திம்மாபுரம், üட்டஅள்ளி, தளிஅள்ளி, கால்வேஅள்ளி, குண்டலப்பட்டி, மிட்டஅள்ளி, எர்ரஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டணம், பாலேகுளி, மாரிசெட்டிஅள்ளி, நாகோஜனஅள்ளி, ஜனப்பர்அள்ளி, பையூர் ஆகிய 16 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 9 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்