வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் இன்னும் இரண்டு நாட்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று மழை ராஜ் கூறியுள்ளார்.
மழை ராஜ், மழை பற்றி ஆய்வு செய்து அனுப்பிய கடிதத்தில், 2008 டிசம்பர் மாதம் 5ஆம் தேதி வானிலை கணிப்பின்படி தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், நாகைக்கும், கடலூருக்கும் இடைப்பட்ட பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடையும் சூழல் உள்ளது.
இதனால் நாகை, கடலூர், புதுச்சேரி, சென்னை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கன மழையும், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதனால் தமிழகத்தில் 8 அல்லது 9ஆம் தேதி முதல் மழை துவங்கி 16ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
16ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் மழை குறைவதற்கு வாய்ப்புள்ளது.
மேலும் நிலநடுக்க தேதியின் கணிப்பின்படி டிசம்பர் மாதம் 8, 14, 22, 28 ஆகிய தேதிகளில் மிதமானது முதல் பலத்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்.