காவேரி பாசன பகுதி நவீனம்-அறிக்கை

திங்கள், 1 டிசம்பர் 2008 (13:36 IST)
சென்னை: காவேரி டெல்டா பகுதிகளில் உள்ள ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள், கிள
வாய்க்கால்கள், கட்டிடங்கள், வடிகால்கள் ஆகியவற்றையெல்லாம் நவீன படுத்தவேண்டும் என்பது அந்த பகுதி மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாகும்.

முதல்வர் கருணாநிதியின் உத்தரவின்பேரில் கல்லணைக்கு கீழ் உள்ள பாசன அமைப்புகளையெல்லாம் நவீனப்படுத்த ஒரு திட்டத்தை உருவாக்க கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதியன்று பாசன அனுபவம் பெற்ற பொறியாளர்கள், வேளாண்மைத்துறை அலுவலர்கள், நீர்ப்பாசனத்துறையில் அனுபவம் பெற்ற 14 உறுப்பினர்களை கொண்ட ஒரு பணிக்குழு (Task Force) திருச்சி மண்டல தலைமைப்பொறியாளர் தலைமையில் அமைக்கப்பட்டது.

தமிழக அரசின் நீர்வளத்துறையினஆலோசகரஅ.மோகனகிருஷ்ணன் ஆலோசனையின்படி அந்த குழ
செயல்பட்டது.

2008-09 ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையின் மானிய கோரிக்கையின் போது, இந்த அறிவிப்பை, முதல்வர் கருணாநிதியின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.

அந்த குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, விவசாய பெருங்குடி மக்களை சந்தித்து அதன்பிறகு ஒரு அறிக்கையை தயார் செய்தது. இந்த அறிக்கையை சென்ற மாதம் 27 ஆம் தேதியன்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனிடம் சமர்ப்பித்திருக்கிறார்கள்.

இத்திட்டத்தின் மூலம் ஆறுகள் மற்றும் கால்வாய்களின் கரைகள் உயர்த்தப்பட்டு, பலப்படுத்தப்பட்டு அவசியம் உள்
பகுதிகளில் கற்கட்டிடங்கள் ஏற்படுத்தப்படும். பாசனக் கால்வாய்களில் தேர்ந்தெடுக்கப்பட்
கால்வாய்களில், சிமெண்ட் பலகைகள் பொறுத்தி பாசன நீர்க்கசிவை குறைத்து நீர் வேகமா
சென்று பாசனத்திற்கு தடையின்றி கிடைக்க வகை செய்யப்படும்.

ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வரும் கட்டுமானங்கள் மேம்படுத்தப்படும். புத
கட்டுமானங்கள் தேவையான இடங்களில் கட்டவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நவீனப்படுத்தப்பட்ட பிறகு பாசனத்திற்கு சரிவர நீர் கிடைக்கும், நீர் விரையமாகாமல் பாசனத்திறன் மேம்படும்.

இத்திட்டத்தின் மூலம் காவேரி -- வெண்ணாறு பாசன பகுதி, கல்லணை கால்வாய் பாசன பகுதி மற்றும் கீழணை பாசன பகுதிகளில் உள்ள சுமார் 17 இலட்சம் ஏக்கர் பயன் பெறும்.

இத்திட்டத்தினமொத்மதிப்பீடூ. 5,100 கோடி என்றதமிழஅரசவெளியிட்டுள்செய்திககுறிப்பிலதெரிவிக்கப்பட்டுள்ளது .

வெப்துனியாவைப் படிக்கவும்