கரும்பு விலை ரூ.1,800- ஆந்திரா விவசாயிகள் கோரிக்கை!
வியாழன், 13 நவம்பர் 2008 (11:21 IST)
கரும்பு விலை ரூ.1,800- ஆந்திரா விவசாயிகள் கோரிக்கை!
விஜயவாடா: கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை டன்னுக்கு ரூ.1,800 ஆக உயர்த்த வேண்டும் என்று ஆந்திர மாநில கரும்பு உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இந்த கூட்டமைப்பின் தலைவர் மல்லிலா பத்பநாப ராவ், செயலாளர் என்.எஸ்.வி.சர்மா ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
ஆந்திர மத்திய அரசு நிர்ணயிக்கும் கரும்பு ஆதார விலையுடன், மாநில அரசு 1 டன் கரும்புக்கு மாநில ஆதார விலையாக ரூ.300 வழங்குவதாக அறிவிக்க வேண்டும்.
பர்கவா குழுவின் பரிந்துரையின் படி, சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு ரூ.100 கோடி வரை வழங்காமல் பாக்கி வைத்துள்ளன. இவற்றை வழங்க வேண்டும்.
சர்க்கரை ஆலை நிர்வாகங்கள், சர்க்கரை ஆலைகளை நவீனப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டதாக தெரிவித்தனர்.
இந்த கூட்டமைப்பின் கூட்டம், சென்ற திங்கட்கிழமை விஜயவாடாவில் நடைபெற்றது.