கம்பம்: கம்பம் உழவர் சந்தையில் காய்கறிகள், பழங்கள் போன்றவை அழுகிப் போகாமலும், பசுமை மாறாமல் இருக்கும் வகையில் பாதுகாக்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்படுகிறது.
இது ரூ.6.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்படுகிறது.
கம்பம் உழவர் சந்தையில் மட்டும் தினமும் சுமார் 24 ஆயிரம் கிலோ காய்கறிகள் விற்பனையாகின்றன. இங்கு விவசாயிகள், விற்பனை ஆகாமல் தேங்கும் விளைபொருட்களை குளிர்பதன கிடங்கில் வைத்து மறுநாள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக உழவர் சந்தை வளாகத்தில் குளிர்பதன கிடங்கு அமைப்பதற்கான கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கிடங்கு ரூ.6.3 லட்சம் செலவில் அமைக்கப்படுகிறது என்று உழவர் சந்தையின் நிர்வாக அலுவலர் தெய்வேந்திரன் தெரிவித்தார்.