நவம்பர் மாதம் 3 அல்லது 4ஆம் தேதி தமிழகத்தில் பரவலாக மழைத் தொடங்கி 7ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது.
மேகங்களை வைத்து மழை பற்றி ஆய்வு நடத்தி வரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மழை ராஜ் என்ற ராஜ் அனுப்பியுள்ள ஆய்வு அறிக்கையின் படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் கடலூருக்கு தெற்கே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழ்நிலையும் உள்ளது.
இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான கடலூர், பாண்டிச்சேரி, சென்னை, நாகப்பட்டினம் உட்பட பல்வேறு இடங்களில் பலத்த மழையும் தமிழகத்தில் இதர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழையும் பெய்யும் வாய்ப்புள்ளது.
நவம்பர் மாதம் 18ஆம் தேதி வரை வடகிழக்கு பருவ மழை நீடிக்க வாய்ப்புள்ளது.
மேலும், மழைராஜ் கணிப்பின்படி அக்டோபர் மாதம் 28ஆம் தேதி பலத்த நிலநடுக்கம் ஏற்படும் என கூறியிருந்தார். அதனை நமது இணையதளத்திலும் வெளியிட்டிருந்தோன். அதன்படியே 29ஆம் தேதி பாகிஸ்தானில் பலத்த நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.