கோவை மாணவருக்கு இஸ்ரேல் நிதி உதவி!

வியாழன், 30 அக்டோபர் 2008 (13:53 IST)
கோவை: வேளாண் பல்கலை கழகத்தை சேர்ந்த மாணவர் சம்பத் குமாருக்கு, இஸ்ரேல் அரசு ஆய்வு பணிகளை மேற்கொள்ள நிதி உதவி அளித்துள்ளது.

இந்த உதவி தொகையை, மத்திய அரசின் மேற்படிப்புக்கான கல்வித்துறையும், இஸ்ரேல் அரசும் இணைந்து வழங்குகின்றன.

கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் உழவியல் துறையில் பட்டப்படிப்பு பயிலும் த.சம்பத்குமாருக்கு, ஹூப்ரூ பல்கலைக் கழகத்தில் ஆய்வு பணி மேற்கொள்ள 2008-09 பருவ ஆண்டுக்கான கல்வி உதவித்தொகை கிடைத்துள்ளது.

இவர் இந்த உதவித் துகையை பயன்படுத்தி 6 முதல் 8 மாதங்கள் வரை ஆய்வுப் பணிகளில் ஈடுபடலாம்.

இந்த உதவித் துகையில் கல்விக்கட்டணம், மருத்துவ காப்பீடு, மாத பாரமரிப்பு தொகை ஆகியவைகளுக்காக 600 அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும்.

தற்போது சம்பத் குமார் சொட்டுநீர்ப்பாசன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், மக்காச்சோளப் பயிரில் ஏற்படும் வினையியல் மற்றும் மகசூல் மாற்றங்களை பற்றி ஆய்வு செய்து வருகிறார்.

இவர் இந்த ஆய்வுப் பணியை மேற்கொள்ள இஸ்ரேலில் உள்ள ஹீப்ரூ பல்கலை.கழகத்தில் வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் தங்கியிருந்து ஆய்வு செய்ய உள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்