உடுமலை: கரும்பு டன்னுக்கு ரூ.1550 வழங்க வேண்டும் என்று ப்படும் என்று அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் கோரியுள்ளனர்.
2008-09 ஆம் ஆண்டு அரவைப் பட்டத்திற்கு மத்திய அரசு 9 விழுக்காடு சர்க்கரை கட்டுமானம் உள்ள கரும்புக்கு டன்னுக்கு ரூ. 811.80 என விலை நிர்ணயம் செய்துள்ளது.
தமிழக அரசு குறைந்தபட்ச பரிந்துரை விலையாக டன் ஒன்றுக்கு ரூ.1050 என அறிவித்துள்ளது.
மத்திய அரசு வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் கரும்பு டன்னுக்கு ரூ.1550 வழங்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையின் அடிப்படையில், கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.1550 கிடைக்கும் என தமிழக கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் கரும்புக்கு கட்டுபடியான விலை கிடைக்காததால் பல விவசாயிகள் லாபம் தரக்கூடிய மக்காச்சோளம் போன்ற பயிர்கள் செய்யயும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசு டன் ஒன்றிற்கு ரூ.1050 என அறிவித்திருப்பதால், விவசாயிகள் கரும்பு நடவு செய்வதையும், கட்டைப் பயிர்களையும் அழித்து விட்டு வேறு பயிர்கள் செய்ய முற்படுகின்றனர்.
எனவே மத்திய மாநில அரசுகள் பரிசீலனை செய்து குறைந்தபட்ச விலையாக கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.1550 என நிர்ணயம் செய்ய வேண்டும் என்று அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்க தலைவர் எஸ்.ஆர்.வேலுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.