வேளாண் பல்கலை. விஞ்ஞானிக்கு சர்வதேச அங்கீகாரம்!

புதன், 22 அக்டோபர் 2008 (11:49 IST)
கோவை : ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச நீர் மேலாண்மை மையத்தின் தெற்காசிய நாடுகளின் இயக்குநராக கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழக வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மைய இயக்குநர் கு.பழனிசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் நீர் கொள்கை ஆராய்ச்சியில் அதிக அனுபவம் உள்ளவர்.

இவர் அமெரிக்காவின் மினசோட்டா பல்கலை., பிலிப்பின்ஸின் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையம், ஜப்பானின் வாசிடா மற்றும் கியோட்டா பல்கலைக்கழகங்களில் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.

மத்திய அரசின் நீர்வள அமைச்சகத்தின் "ஒருதுளி நீரில் அதிக விளைச்சல் மற்றும் வருவாய்' என்ற திட்டத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்த நீர்மேலாண்மை மையம், வேளாண் வளர்ச்சியில் நீரின் முக்கியத்துவம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்