குன்னூரில் இயற்கை வேளாண் கருத்தரங்கு!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (11:09 IST)
குன்னூர்: குன்னூரில் இயற்கை வேளாண்மை கருத்தரங்கு நடைபெற உள்ளது.

இந்த கருத்தரங்கு குன்னூர் உபாசியரங்கில் நாளையும், நாளை மறுநாளும் (15, 16 தேதி) இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது.

இந்த கருத்தரங்கின் முதல் நாளில் சுபாஷ்பாலேகர் செலவில்லாத இயற்கை வேளாண்மை குறித்தும், தேயிலை, காய்கறிகள் மற்றும் இதரப் பயிர்களில் அதிகளவு மகசூல் பெறுவது பற்றியும் விளக்கம் அளிக்கிறார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பங்கேற்று பயனடைய வேண்டும் என்று உபாசி வேளாண்மை அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளரும் அதன் தலைவருமான ப.குமாரவடிவேலு தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்