வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!

செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (10:12 IST)
பெரியாறு பாசபகுதிகளில் ஒரு போக சாகுபடிக்கு வைகை அணையிலிருந்து நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களின் பெரிய பிரதானக் கால்வாய் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயில் பதிவு பெற்ற ஒரு போக பாசன நஞ்சை நிலங்கள் 1,05,002 ஏக்கர்.

இதிலதிண்டுக்கல் மாவட்டத்தில் 199 ஏக்கர், மதுரை மாவட்டத்தில் 98,764 ஏக்கர், சிவகங்கை மாவட்டத்தில் 6,039 ஏக்கர் பயன்பெறும் வகையில் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

வைகை அணையிலிருந்து விவசாய பணிகளுக்காக 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படும்.

விவசாயிகள் குறுகியகாலப் பயிர்களை நடவு செய்து, தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி அதிக மகசூல் அடைய பொதுப் பணித் துறையினருக்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும்.

மேலும் பருவ மழை தவறி, பெரியாறு அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லையெனில் நீர் இருப்பைக் கணக்கில் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப முறைப் பாசனம் அமல்படுத்தப்படும் என்று மதுரை பெரியாறு வைகை வடிநில கோட்ட செயற் பொறியாளர் வி.சீனிவாசகம் தெரிவித்துள்ளார்.



வெப்துனியாவைப் படிக்கவும்