ஞாயிறு முதல் பரவலாக மழை பெய்யும்!

வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (21:04 IST)
வடமேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நாட்டின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

மழையின் தாக்கம், நாட்டின் மத்தியப் பகுதிகளிலும், வடக்கு பகுதிகளிலும் அதிகம் இருக்கும் என்று கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், இந்த வாரத்திற்குப் பிறகு வடகிழக்குப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழ்நாட்டிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்