மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
புதன், 3 செப்டம்பர் 2008 (13:30 IST)
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழையின் காரணமான மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் இன்று காலை 90.830 அடியாக இருந்தது. மொத்தக் கொள்ளளவு 120 அடி ஆகும். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 37,675 கன அடியாகவும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 13,000 கன அடியாகவும் உள்ளது.
கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1,212 கன அடியும், வெண்ணாறில் வினாடிக்கு 7,511 கன அடியும், கல்லணைக் கால்வாயில் வினாடிக்கு 3,221 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.