மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 82.43 அடியாக இருந்தது. இதன் அதிகபட்ச நீர் மட்டம் 120 அடி.
இன்று அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 9,980 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணைக்கு நீர் வரத்து குறைந்தாலும், பாசனத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்படவில்லை.
நேற்று காலை அணைக்கு விநாடிக்கு 23,725 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து விநாடிக்கு 15,038 கன அடி திறந்து விடப்படுகிறது.
கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 1,515, கன அடி, வென்னாற்றில் 8,043 கல்லணை கால்வாயில் 2,513 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 1217 கன அடி தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது.