மேட்டூர் நீர் மட்டம் 60 அடியை தாண்டியது!

புதன், 6 ஆகஸ்ட் 2008 (12:48 IST)
மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 60 அடியை தாண்டியது.

கடந்த ஒரு வாரமாக அணைக்கு நீர் வரத்து அதிக அளவு வ‌ந்து கொ‌ண்டிரு‌ப்பதா‌ல், அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

இன்று காலை அணையின் நீர் மட்டம் 60.680 அடியாக இருந்தது. அணையின் அதிக பட்ச நீர் மட்டம் 120 அடி.

அணைக்கு விநாடிக்கு 23,178 கன அடி தண்ணீர் வந்து கொ‌ண்டுள்ளது. காவிரி பாசன பகுதி சாகுபடிக்காக அணையில் இருந்து விநாடிக்கு 13,005 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இது காவிரி ஆற்றில் விநாடிக்கு 6066, வெண்ணாற்றில் 102, கல்லணை கால்வாயில் 2,306, கொள்ளிடம் ஆற்றில் 810 கன அடி வீதம் திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வருவதால், காவிரி பாசன பகுதி விவசாயிகளும், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்