காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கனமழை!

திங்கள், 28 ஜூலை 2008 (13:41 IST)
காவிரி நீர் பிடிப்பு பகுதியான குடகு பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது.

தென் மேற்கு பருவமழை பல பகுதிகளில் சராசரியை விட குறைந்த அளவு பெய்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதியான் குடகு பிரதேசத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த பகுதியில் காவேரி, கன்னிகா, சுஜ்யோதி ஆகிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது.

இதனால் பள்ளிகளுக்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது ஆற்றின் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும் படி மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

இந்த பிரதேசத்தில் பெய்யும் மழையால் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ண சாகர் அணை நிரம்பிய பிறகு, மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது.

மேட்டூர் நீர்மட்டம் குறைந்தது!

காவிரி டெல்டபாசனத்ததிற்காக மேட்டூரஅணையிலஇருந்து ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்தவிடப்பட்டது. இதனால் நீர் மட்டம் குறைந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் முதன் முறையாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 55 அடியாகுறைந்துள்ளது. இதனால் அணயில் உள்ள தேவாலயத்தின் கோபுரம் வெளியே தெரிகிறது.

மேட்டூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் தென் மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் அணைக்கு வரம் நீர் அளவு குறைந்து போனது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 946 கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. காவிரி பாசன பகுதிகளின் நீர் தேவைக்காக விநாடிக்கு 11,988 கன அடி திறந்து விடப்படுகிறது. இவை காவிரியில் விநாடிக்கு 51 கன அடி, வென்னாரில் விநாடிக்கு 6,554 கன அடி, கலலணை கால்வாயில் விநாடிக்கு 1,804 கன அடி, கொள்ளிடம் ஆற்றில் 810 கன அடி விதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி 55 அடி தண்ணீரே உள்ளது. இதில் 45 அடி தண்ணீர் மட்டுமே அணையில் இருந்து திறந்துவிட முடியும்.

தற்போதுள்ள நிலையில் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களின் விவசாயத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படுமா என்ற கேள்வி விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

மேட்டூர் அணையின் கிழக்கு - மேற்ககால்வாய்கள் மூலம் சேலம் மற்றும் நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45,000 ஏக்கரநிலம் பாசன வசதி பெறுகிறது. இதில் வழக்கமாக ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்காக திறக்கப்படும்.

டிசம்பர் 15ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு 9.5 டி.எம்.சி தண்ணீர் விடப்படும்.

தற்போது பருவமழை போதிய அளவு பெய்யாததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து போனது. காவிரி டெல்டா பாசனத்திற்காக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இப்போது மேட்டூர் அணையில் இருக்கும் தண்ணீர் இன்னும் 11 நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்காக போதுமானதாக இருக்கும். காவிர் பாசன பகுதிகளில் குறுவை பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலையில் கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இதனால், தஞ்சை, திருச்சி, நாகை. திருவாரூர், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்ட் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் காவிரி உள்ளிட்ட நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தியாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்