நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1,000 வழங்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியள்ளது.
ஒரிசா மாநில தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பிஜய் மகாபத்ரா செய்தியாளர்களிடம் பேசும் போது, மத்திய அரசு நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவின்டாலுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என்று மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது. ஆனால் மாநில அரசு ரூ.850 ஆக நிச்சயித்துள்ளது என்று மாநில அரசு மீது குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் கூறுகையில், ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், தனது அரசு அரசு விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக கூறிக் கொள்கிறார். ஆனால் இந்த அரசு விவசாயிகளுக்கு எதிரானதாகவும், அவர்கள் நலனை புறக்கணிப்பதாகவும் உள்ளது.
மத்திய அரசின் விவசாய விளை பொருட்கள் விலை நிர்ணயகுழு நெல்லுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. இந்த பரிந்துரை எல்லா மாநில அரசுகளுக்கும் கடந்த பிப்ரவரி மாதத்தில் அனுப்பிவைக்கப்பட்டன.
இந்த பரிந்துரையின் அடிப்படையில், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அதிக விலை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி வருகின்றன.
இந்தியாவிலேயே ஒரிசா மாநில அரசு மட்டும் தான், நெல் விலை ரூ.850 என நிர்ணயிக்க வேண்டும் என்று கூறி வருகிறது என்று தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரான சரத் பவார், மத்திய விவசாய துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.