கேரளாவில் வழக்கமாக ஜூன் 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும். இந்த வருடம் நான்கு நாட்களுக்கு முன்னதாக, மே 29ஆம்தேதி தொடங்கும என்று முதலில் வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படாத காரணத்தினால், பருவ மழை தாமதமாக தொடங்கும் என்று வெள்ளிக் கிழமை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த பருவமழையை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்கின்றனர். இந்த மழையால் நெல், சோயா, நிலக்கடலை ஆகியவற்றின் உற்பத்தி கணிசமான அளவு இருக்கும். அத்துடன் பருவமழை சராசரி அளவு பெய்தால் உணவு பொருட்கள் விலை உயர்வும், தட்டுப்பாடும் நீங்கும். இது 8.1 விழுக்காடாக உயர்ந்துள்ள பணவீக்கத்தை கட்டுப்படுத்த அரசுக்கு உதவிகரமாக இருக்கும்
பிரதமர் மன்மோகன் சிங், சாராசரி அளவு பருவமழை பெய்தால் விலை உயர்வது குறையும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.